0
ஊறவைத்த கொண்டைக் கடலை - 1½ கப்,
வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய தக்காளி - 2,
ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 2, பிரிஞ்சி இலை - 1,
நறுக்கிய வெங்காயம் - 2,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள்  தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
பாஸ்மதி அரிசி - 1 கப்,
கொத்தமல்லித்தழை - 1 கட்டு,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை வேகவைத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை சாதமாக உதிரியாக வடித்து கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பிரிஞ்சி இலை, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய இஞ்சி, உப்பு, அனைத்து மசாலாத்தூள்கள், வெந்த கொண்டைக்கடலை சேர்த்து வதக்கி, சாதம் சேர்த்து கலந்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top