0
பட்டர் பீன்ஸ் - 20 கிராம்,
உருளைக்கிழங்கு - 2 (இந்த இரண்டையும் வேக வைத்துக் கொள்ளவும்),
வெங்காயம் - 2,
பழுத்த தக்காளி - 2,

பச்சை மிளகாய் கீறியது - 2,
இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
கிராம்பு, பட்டை ஒன்றிரண்டாக தட்டியது - 1/2 டீஸ்பூன்,
மல்லித் தூள்- 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 2 சிட்டிகை,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

அரைக்க...

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
முந்திரி - 4,
சோம்பு - 1/2 டீஸ்பூன்.

இவை அனைத்தையும் விழுதாக சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, ஒன்றிரண்டாக தட்டிய பட்டை, கிராம்பு இவைகளை அடுத்தடுத்து போட்டு நன்கு வதக்கவும். அனைத்துப் பொடிகளையும் சேர்க்கவும். பிறகு வெந்த உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ் சேர்த்து பிரட்டி அரைத்த விழுதை சேர்த்து 1 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top