0
மீன் - அரைக் கிலோ ( சிறு துண்டாக நறுக்கியது).
மிளகாய்த் தூள் - 25 கிராம்.
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்.
மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்.
சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்.

உப்பு  - தேவைக்கேற்ப.
எலுமிச்சை - 1.
ஓமம் - கால் டீஸ்பூன்.
கறிவேப்பிலை - சிறிதளவு
(பொடியாக நறுக்கியது).
பூண்டு - ஐந்து பல் (நசுக்கியது).
அரிசி மாவு - 25 கிராம்.
முட்டை - 2 (வெள்ளைக்கரு பகுதி மட்டும்) .


எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், ஓமம், பூண்டு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் அரிசி மாவு, முட்டை வெள்ளைக்கரு சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து சில நிமிடங்கள் வெயிலில் காய வைத்து கடலெண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். முட்டையின் வெள்ளைக் கருவும் வெயிலில் காயவைக்கும் முறையும்தான் ருசியை கூட்டுபவை அல்லது குறைப்பவை.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top