0
ஆட்டுக்கால் - 4.
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4.
மஞ்சள் தூள் - கால் சிட்டிகை.

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி.
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி.
தனியாத்தூள் - 2 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
தேங்காய் - அரை மூடி.


எப்படிச் செய்வது?

பட்டை, ஏலம், கிராம்பு தலா இரண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசைக்கரண்டி, கொத்தமல்லி ஒரு கொத்து, புதினா சிறிதளவு சேர்த்து தேங்காயுடன் பால் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் ஆட்டுக்காலுடன், நறுக்கியதில் முக்கால் பாகம் வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, மிளகுத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் ஊற்றி (குக்கர் என்றால் 6 விசில்) அரைமணி நேரம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் குறைவான தீயிலும் வைத்து இறக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மீதம் உள்ள வெங்காயத்தை வதக்கி இஞ்சி,  பூண்டு கலவையுடன் இரண்டு நிமிடம் வதக்கி, கொத்தமல்லி, புதினா சேர்த்து கொதித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்காலுடன் தேங்காய் விழுதைப் போட்டு கொதிக்க விடவும். இறுதியாக இரண்டையும் கலந்தால் ஆட்டுக்கால் பாயா தயார். 
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top