0
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 1/2 கிலோ,
சர்க்கரை போடாத பால்கோவா - 200 கிராம்,
ஏலக்காய் - 2,
பட்டை - 1 துண்டு,
லவங்கம் - 4,

வெங்காயம் (பெரியது) - 2,
தக்காளி (பெரியது) - 1,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் - ஒரு சிட்டிகை,
மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க முந்திரி - 10,
மல்லித்தழை, நெய் அல்லது வெண்ணெய்,
தயிர் - 1/4 கப்,
சர்க்கரை - ஒரு சிட்டிகை.


எப்படிச் செய்வது?

பச்சைப் பட்டாணியை தோலுரித்து வேக வைத்துக் கொள்ளவும். பால்கோவாவையும் தயிரையும் கடையவும். கடாயில் நெய்/வெண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து பொரித்து இத்துடன் வெங்காயம், தக்காளியை அரைத்து சேர்க்கவும். அது நன்கு வதங்கியதும் நெய் தனியாக பிரியும் போது, கோவா தயிர் விழுதை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். தூள்கள் அனைத்தையும் சேர்க்கவும். அவை பொரிந்ததும் பச்சைப்பட்டாணி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இது நெய்/வெண்ணெய் பிரிந்து கிரேவியாக வரும்போது சர்க்கரை, மல்லித்தழை, முந்திரி வறுத்தது. மேல் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: இது மிக ரிச்சான டிஷ். இதை ரொட்டி, ஸ்டீம்டு பாஸ்மதி சாதம், நாண், புரோட்டா, புல்காவுடன் சாப்பிடுவார்கள்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top