0
பொரி - 1 பாக்கெட்,
வெங்காயம் - 2,
கேரட் துருவல் - 1/4 கப்,
வேகவைத்த உருளைக்கிழங்கு - 1, தக்காளி - 1,

ஓமப்பொடி - 1/2 கப்,
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
வேகவைத்த வேர்க்கடலை - 1/4 கப்,
மிக்ஸர் - 1/4 கப், இனிப்பு சட்னி,
காரச் சட்னி - தேவைக்கு.

இனிப்பு சட்னி...

பேரீச்சம் பழம் - 5,
புளி - நெல்லிக்காய் அளவு,
வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்.

காரச் சட்னி...

புதினா - 1 கட்டு,
தேவையானால் கொத்தமல்லித்தழை - சிறிது,
பச்சைமிளகாய் - 2,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

இனிப்பு சட்னிக்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கலர் சிறிது மாறியதும் இறக்கி ஆறவிடவும். காரச் சட்னிக்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை...

ஒரு பெரிய பாத்திரத்தில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், இருவகை சட்னியையும் கலந்து கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top