0
கோதுமை மாவு - 100 கிராம்,
சிக்கன்- 100 கிராம்,
சிக்கன் டிக்கா மசாலா - 100 கிராம்,
எண்ணெய் - 80 மி.லி.,
குடைமிளகாய் - 50 கிராம்,

கடுகு சாஸ் - 50 மி.லி.,
தக்காளி சாஸ் - 50 மி.லி.,
வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
வெங்காயம்,
தக்காளி மசாலா - 50 கிராம்,
கொத்தமல்லித்தழை - 1 டீஸ்பூன்,
முட்டை - 2,
பச்சைமிளகாய் - 2,
பச்சைமிளகாய் சாஸ் - 10 மி.லி.,
புதினா சட்னி - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, எலுமிச்சைப்பழம் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சிக்கன், குடைமிளகாய், வெங்காயம் அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் காய்கறி, சிக்கன் மற்றும் மசாலாக்களை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். கோதுமை மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். முட்டையை அடித்துக் கொள்ளவும். மாவை சப்பாத்தியாக திரட்டி, அதன் மேல் முட்டையை பரப்பி விட்டு சுட்ட எடுக்கவும். அதில் சிக்கன் மசாலாவை வைத்து உருட்டி வெங்காயம், தக்காளி, எலுமிச்சம் பழத்தால் அலங்கரித்து பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top