0
கொத்துக்கறி - 300 கிராம்,
வெங்காயம் - தேவையான அளவு,
இஞ்சி - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 2,

பட்டை, லவங்கம் - தலா 2,
கொத்தமல்லித்தழை - சிறிது,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கு.

கிரேவிக்கு...

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிது,
பெரிய உருளைக்கிழங்கு - 1,
முருங்கைக்காய் - 1,
தேங்காய்ப்பால் - 1 கப்,
எலும்பு சூப் - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 2,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

உருண்டை செய்ய கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு அரைத்து உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

கிரேவி செய்ய...
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், சூப் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் உருண்டைகளை போடவும். உருண்டை வெந்து மேலே வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் முந்திரி துண்டு வைத்தால் சுவையாக இருக்கும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top