0
காளான்    1/4 கிலோ
தக்காளி    2
சின்ன வெங்காயம்    100 கிராம்
மிளகாய்தூள்    1 ஸ்பூன்
மல்லித்தூள்    1 ஸ்பூன்

பெருஞ்சீரகம்    1/2 ஸ்பூன்
தேங்காய்    2 சில்லு
இஞ்சி பூண்டு விழுது    1 ஸ்பூன்
பட்டை, கிராம்பு    சிறிதளவு
மஞ்சள்தூள்    1/4 ஸ்பூன்


செய்முறை:

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை முதலிலும், தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை பிறகும் போட்டு நன்கு வதக்கவும். அடுப்பை லேசான தீயில் வைத்த பிறகு, காளானை கழுவி 2 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இப்போது வாணலியில் ஏற்கனவே உள்ள கலவையுடன், காளான், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் தேங்காய் கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அவ்வளவுதான்... இத்துடன் மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். இறக்கும்போது மல்லித்தழையை தூவவும். அவ்வளவுதான்.. இட்லி, சப்பாத்தி, பூரி, சாதம் என எதனுடன் ஒத்துப்போகும், சுவையான காளான் குருமா ரெடி...!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top