0
மட்டன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

பொட்டுக்கடலை பொடி - 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க...

பெருஞ்சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - தேவையான அளவு
பூண்டு - தேவையான அளவு


எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் மட்டன் எடுத்து கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். மிக்சி ஜாரில் பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மசித்து மட்டன் கலவையில் ஊற்றி மிக சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். வெந்த பின் அதில் உள்ள தண்ணீர் ஆவியாகும் வரை அடுப்பில் வைத்து கிளறவும். இப்போது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு பின் மட்டன், பொட்டுக்கடலை பொடி சேர்த்து நன்கு டாஸ் செய்யவும். சுவையான மட்டன் ரோஸ்ட் தயார்!!!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top