0
முழு கருப்பு உளுந்து - 150 கிராம்,
தக்காளி விழுது - 50 மி.லி.,
உப்பு இல்லாத வெண்ணெய் - 100 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் - 50 மி.லி.,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்


எப்படிச் செய்வது?

உளுந்தை நன்கு கழுவி இரவு முழுக்க ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடிகட்டி கடாயில் சேர்த்து அதில் 1½ லிட்டர் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து மூடிப் போட்டு வேக வைக்கவும். உளுந்து வெந்ததும் அதை ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய்த்தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து 45 நிமிடம் வேகவிட்டு, மசாலா வாசனை போனதும் இறக்கி, ஃப்ரெஷ் கிரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top