0
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்,
மஞ்சள் தூள் - 1  டீஸ்பூன்,
நீள துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் - 1,
கேரட் - 1,
பீன்ஸ் - 4,

சாம்பார் வெங்காயம் - 10,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க கொத்தமல்லி - தேவைக்கு.

வறுத்து அரைக்க...

காய்ந்தமிளகாய் - 4, கடலைப்
பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்,
தனியா - 4 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம், எண்ணெய் - தலா 1 டீஸ்பூன்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பெரிய தக்காளி - 2.

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வறுத்து அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து அரைத்து,  அத்துடன் அரைக்க கொடுத்த பொருட்களையும் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை வதக்கி தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தனியே வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் 1 கப், உப்பு, மஞ்சள் தூள், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ் போட்டு வேகவிடவும். பாதி வெந்ததும் வதக்கிய வெங்காயம், வேகவைத்த துவரம்பருப்பை தண்ணீரோடு ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுது சேர்த்து, 2 கொதி வந்ததும் தாளித்த பொருட்களை கொட்டி இறக்கி, மல்லித்தழையை தூவி அலங்கரித்து, சாதம், இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

குறிப்பு: புளி, சாம்பார் பொடி இரண்டும் அரைத்து விட்ட சாம்பாரில் சேர்க்கக் கூடாது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top