0
புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - தேவைக்கு,
காய்ந்த மிளகாய் - 6,
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 பிடி,
சாம்பார் பொடி அல்லது குழம்புப் பொடி - 4 டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
மணத்தக்காளி வற்றல் அல்லது சுண்டைக்காய் வற்றல்,
எண்ணெய்-தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து பெருங்காயம், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, துவரம் பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக வந்ததும் வற்றலையும், குழம்புப் பொடியையும் சேர்த்து, நன்றாக வறுக்கவும். பின் புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். கடைசியில் சிறிது தண்ணீரில் அரிசி மாவை நன்றாகக் கலந்து கொதிக்கும் குழம்பில் ஊற்றி, நன்றாகக் கொதிவந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்பு: வற்றல் குழம்பை சாதத்துடன் கலந்து சிறிது நெய்யோ (அ) நல்லெண்ணெயோ கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மணத்தக்காளி, சுண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய் வற்றல் ஆகியவற்றில் செய்யலாம். இதில் மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றலில் செய்தால் வயிற்றுப்புண் ஆற்றி குடல்பூச்சியையும் அகற்றி விடும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top