0
முட்டை - 2
வெங்காயம் - 2 தேக்கரண்டி (நறுக்கப்பட்டது)
தக்காளி - 2 தேக்கரண்டி
நறுக்கப்பட்ட மிளகாய் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 2 தேக்கரண்டி (நறுக்கப்பட்டது)

கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
மிளகு தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 1 முதல் 2 தேக்கரண்டி
உப்பு - சிறிது


எப்படிச் செய்வது?

முதலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி இலை முதலியவற்றை வெட்டி வைக்கவும். ஒரு சிறிய கிண்ணத்தில், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மசாலா விழுது சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெட்டி வைத்த அனைத்தையும் இவற்றுடன் சேர்த்து கலந்து, கடாயில் எண்ணெய் விட்டு முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும். மசாலா ஆம்லெட் ரெடி!!!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top