0
மட்டன் - 1/4 கிலோ,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்,

கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,
பொட்டுக்கடலை - 1/2 கப்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு, முட்டை - 1.


எப்படிச் செய்வது?

மிக்சியில் பொட்டுக்கடலையை போட்டு மாவாக அரைத்து தனியே எடுத்துக் கொள்ளவும். எலும்பில்லாத மட்டனை மிக்சியில் போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், அரைத்த மட்டன், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

பின் தேங்காய்த்துருவல் சேர்த்து சுண்ட வதக்கி இறக்கவும். இத்துடன் பொட்டுக்கடலை மாவு, கொத்தமல்லித்தழையை கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். முட்டையை நன்கு அடித்து கொள்ளவும். கோலா உருண்டைகளை முட்டையில் முக்கியெடுத்து, சூடான எண்ணெயில் பொரித் தெடுத்து பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top