0
சிக்கன்    1/2 கிலோ
மைதா    100 கிராம்
மிளகாய் தூள்    1 ஸ்பூன்
பிரட் தூள்    100 கிராம்
முட்டை    1
தயிர்    1 கப்

இஞ்சி பூண்டு விழுது    2 ஸ்பூன்
கேசரி பவுடர்    சிறிதளவு
பேக்கிங் பவுடர்    1 ஸ்பூன்


செய்முறை:

சிக்கனை எலும்பில்லாமல், ஆட்காட்டி விரல் நீளத்திற்கு அளவாக வெட்டி வாங்கவும். இதை கழுவி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி கலக்கவும். இத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய் தூள், கேசரி பவுடர், உப்பு போட்டு கலக்கவும். இக்கலவையுடன் சிக்கனை நன்றாக பிரட்டி, இரண்டரை மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடரை போட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். ப்ரிட்ஜில் இருந்து சிக்கனை வெளியே எடுத்து தயிரை வடிகட்டவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை மைதா மாவு கலவையில் நனைத்து, பிரட் தூளில் ஒரு பிரட்டு பிரட்டி போடவும். அவ்வளவுதான்... பிங்கர் சிக்கன் தயார். எலுமிச்சை சாறை பிழிந்து, மல்லி தழையை பிய்த்து போட்டு  சாப்பிட்டு பாருங்கள்... செமையா இருக்கும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top