0
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 15 கிராம்
பூண்டு - 10 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூர் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளித்த கீரை(கோங்குரா) - ஒரு கட்டு
நல்லெண்ணெய் - 100 மில்லி
சிறிய வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 150 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு


எப்படி செய்வது?

மட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், சுத்தம் செய்த புளித்த கீரை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு நன்கு ஆறவிட்டு அதை துவையல் செய்துகொள்ளவும். இஞ்சி, பூண்டையும் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். மற்றொரு சட்டியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், விட்டு தாளிக்க வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு கலவையை, பச்சைத்தன்மை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மீண்டும் நன்கு வதக்க வேண்டும். பின்பு அரைத்த புளித்த கீரை துவையலை சேர்க்க வேண்டும். பின்னர் வேகவைத்த இறைச்சியை, தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு போட்டு, பதம் பார்த்து இறக்கி விட்டு, நறுக்கிய கொத்தமல்லியை தூவ வேண்டும். அவ்வளவுதான்... கோங்குரா மட்டன் ரெடி. இவற்றை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். சாதத்துக்கும் பிசைந்து சாப்பிடலாம்... சுவையாக இருக்கும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top