0
முள் இல்லாத சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1 கிலோ,
இஞ்சி - 1  இன்ச் துண்டு,
தயிர் - 1/4 கப்,
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்,

சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்,
பூண்டு பல் - 6,
செடார் சீஸ் - 1/4 கப்,
விப்பிங் கிரீம் - 1/4 கப்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
உப்பு-தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மீன் தவிர 1/4 டீஸ்பூன் குங்குமப்பூவுடன் மற்ற அனைத்து பொருட்களையும், சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மீனில் அரைத்த மசாலாவைக் கலந்து, குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு மீன் துண்டுகளை ஸ்க்யூவர்சில் குத்தி பார்பக்யுவில் கிரில் செய்யவும் அல்லது தவாவில் எண்ணெயை காயவைத்து எல்லா பக்கமும் வேகும்படி பொரித்தெடுக்கவும். பாத்திரத்தில் சிறிது வெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் விப்பிங் கிரீம், 1/4 டீஸ்பூன் குங்குமப்பூவை சேர்த்து நன்கு கலந்து, பொரித்த மீன் துண்டுகளின் மேல் தடவி, 2 நிமிடம் தவாவில் வைத்து பறிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top