0
காளான் - 400 கிராம்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 200 கிராம் (நறுக்கவும்),
கிள்ளிய காய்ந்தமிளகாய் - 3,
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பெங்களூர் தக்காளி - 2 (நறுக்கவும்),

உப்பு - தேவைக்கு,
மிளகு - 1 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

காளானை நன்கு கழுவிச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். மிளகு, தக்காளி, சோம்பை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி மஞ்சள் தூள், தனியா தூள், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அரைத்த விழுது சேர்த்து வதக்கி, காய்ந்தமிளகாய், காளானைச் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி இக்கலவையை குக்கருக்கு மாற்றி 2 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். சத்தம் அடங்கியதும் குக்கரை திறந்து காளான் கலவையை நன்கு வறுத்து இறக்கி மல்லித்தழை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: காளானுக்கு பதில் பனீர், காலிஃப்ளவர், பிரக்கோலியிலும் செய்யலாம். காலிஃப்ளவர் ஃப்ரை சாதத்துடன் சாப்பிடவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top