0
சிக்கன் - 100 கிராம், முந்திரி - 10,
வெங்காயம் - 150 கிராம்,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
நெய் - 50 மி.லி.,
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
தயிர் - 100 கிராம், உப்பு - தேவைக்கு,

கஸ்தூரி மேத்தி தூள் - 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 50 கிராம்,
ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய்த்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 50 மி.லி.,
கருப்பு ஏலக்காய் - 1.


எப்படிச் செய்வது?

முந்திரி, வெங்காயம் மற்றும் தேங்காய்த்துருவலை கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மற்ற மசாலாக்களை சேர்க்கவும். மசாலா வாசனை போகும் வரை நன்கு கொதிக்க வைத்து, ஃப்ரெஷ் கிரீம் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். சிக்கனை தந்தூரி முறையில் சமைத்து அதை இந்த மசாலாவுடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top