0
என்னென்ன தேவை?

நாட்டுக்கோழி - ஒரு கிலோ
சன் பிளவர் ஆயில் - 100,
வெள்ளை பூண்டு - 100 கிராம்,  
பட்டை, பிரியாணி இலை, அன்னாசி பூ தேவையான
அளவு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
சின்ன  வெங்காயம் - அரை கிலோ,
தக்காளி - 1/4 கிலோ,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்,
இஞ்சி, வெள்ளை பூண்டு விழுது - தேவையான  அளவு
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

நாட்டுக்கோழி கறியை எடுத்து அரிசி கழுவின தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். அடுப்பில் ஒரு சட்டியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், பட்டை, பிரியாணி இலை, சோம்பு, அன்னாசி பூ எல்லாம் எடுத்துப் போட்டு வதக்கவும். இப்போது உரித்து வைத்த சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கின தக்காளி எடுத்து அடுப்பில் இருக்கும் சட்டியில் கொட்டி வதக்கவும். சட்டியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து பொன்னிறத்தில் மாறியதும் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது 4 டீஸ்பூன் எடுத்து சட்டியில் போட்டு வதக்கவும்.

பத்து நிமிடம் கழித்து, 3 டீஸ்பூன் மிளகாய் பொடியையும், அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியையும் சட்டியில் தூவி வதக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டும் ‘மை’ மாதிரி மாறும் வரை வதக்கவும். இப்போது உங்களுக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து கோழிக்கறிய எடுத்து, சட்டியில் போட்டு கிளறவும். அரை மணிநேரம் அப்படியே சட்டியில் வேக விடவும். தக்காளி, வெங்காயம் எதுவும் வெளிய தெரியக்கூடாது. கோழிக்கறி மட்டும்தான் தெரியணும். அதுவரை வதக்கவும். அப்போதுதான் தனி ருசி கிடைக்கும். சுவையான நாட்டுக்கோழி கிரேவி தயார்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top