0
மலையாளத்தில் வௌியான பிரேமம் என்ற ஒரு படம் கொடுத்த வெற்றியால் தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நடிகை மடோனா
செபாஸ்டியனுக்கு. விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் பெரிய வெற்றி என்று இல்லாவிட்டாலும் மடோனாவை அடையாளம் காட்டியது. தொடர்ந்து கவண், பவர்பாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார். நடித்தது என்னவோ வெறும் மூன்று படங்கள் தான், ஆனால் அதற்குள் அம்மணி பண்ணும் பந்தா, பில்டப் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள். எடுத்த எடுப்பிலேயே தன்னை நயன்தாரா போன்று நினைத்து கொண்டு படத்தின் புரொமோஷனுக்கு வரமாட்டேன், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தர மாட்டேன் என்று தடாலடியாக கூறுகிறாராம்.

சமீபத்தில் நடந்த பவர் பாண்டி படத்தின் பிரஸ் மீட்டுக்கு அழைத்தும் வர மறுத்துவிட்டாராம். பத்திரிகையாளர்கள் யாரேனும் தொடர்பு கொண்டு படம் பற்றி பேச முயன்றால் பதில் தர மறுக்கிறார். படம் ரிலீஸாக இன்னும் ஒருவாரமே இருக்கிறது, ஆகையால் படத்தின் புரோமாஷனுக்கு வாருங்கள் என்று மானேஜர் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அவரை திட்டி அனுப்பிவிட்டாராம். இதனால் மடோனா மீது அதிருப்தியில் இருக்கின்றனர் பவர் பாண்டி படக்குழுவினர்.

இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கவில்லை அதற்குள் இவ்வளவு பந்தாவா என்று கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top