0
டிராய் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஜியோ சம்மர் சலுகை ரத்து செய்யப்படுவதாக ஜியோ அறிவித்துள்ளது. அதிவேக ஜியோ 4ஜி வசதியை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் குழும தலைவர்
முகேஷ் அம்பானி, வாடிக்கையாளர்களுக்கு தனது பிரைம் சேவைகள் உட்பட அனைத்தையும் இலவசமாக அளித்தார். கடந்த மார்ச் 31ம் தேதியுடன் இலவச சேவை முடிவடைந்தது. அதேநேரத்தில், மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு, மாதம் ரூ.303 கட்டணத்தில் டேட்டா, இலவச அழைப்பு வசதி மட்டுமின்றி அனைத்து பிரைம் சேவைகளையும் பெறலாம் என அறிவித்தார்.

 பிரைம் வாடிக்கையாளராகும் கெடு பின்னர் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டது. அதோடு, பிரைம் வாடிக்கையாளராக சேர்ந்தவர்களுக்கு, காம்ப்ளிமென்டரி அடிப்படையில் மேலும் 3 மாதம் இலவச சேவையை நீட்டித்தது. இதனால் ஜூலையில் இருந்துதான் கட்டண டேரிப் நடைமுறைக்கு வரும்.
 இந்நிலையில், ஜியோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த 3 மாத காம்ப்ளிமென்டரி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்ற டிராய் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முடிவை ஜியோ ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் காம்ப்ளிமென்டரி சலுகைகள் ரத்து செய்யப்படும். கூடிய விரைவில் அடுத்த சில நாட்களில் இது செயல்படுத்தப்படும். அதேநேரத்தில், இந்த ரத்துக்கு முன்பு  திட்டத்தில் சேர்ந்தவர்கள் பலன்பெற தகுதியுடையவர்கள் என ஜியோ தெரிவித்துள்ளது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top