0
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தில் கதாநாயகியாக நடித்த நீது சந்திரா தமிழில் மிகப்பெரிய அளவில் ரவுண்ட் வருவார் என
எதிர்பார்க்கப்பட்டார். ஆதி பகவன் படத்தின் தோல்வி நீதுவின் கேரியரையே காலி பண்ணிவிட்டது. தொடர்ந்த முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், ஒரு கட்டத்தில் கிடைக்கிற படங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அதன்படி, ஆர்கே உடன் 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்தார். நீது சந்திரா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் 'வைகை எக்ஸ்பிரஸ்' படம் கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. 'வைகை எக்ஸ்பிரஸ்' வெளிவந்த நேரமோ என்னவோ, 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே, தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இப்போது மூன்றாவது கதாநாயகியாக நீத்து சந்திராவும் இணைந்துள்ளார். சிம்புவுடன் நீத்து சந்திரா நடிக்கும் முதல் படம் இது. நீத்து சந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரம் நடைபெறவிருக்கிறது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top