0
வெண்டைக்காய் பெப்பர் பிரை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும். இப்போது வெண்டைக்காய் பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 1/4 கிலோ,
மிளகு - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பூண்டு - 3 பல்,
கடுகு - தாளிக்க.

செய்முறை :

* வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

* பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.  

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும். 

* பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த மிளகு கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும். 

* நன்கு சுருள வந்தபின் இறக்கவும். 

* சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை ரெடி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top