0



கோதுமை மாவில் பரோட்டா செய்தால் சூப்பராக இருக்கும். இன்று எளிய முறையில் முட்டை சேர்த்து பரோட்டா செய்வது எப்படி என்று
பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு -1/2 கப்
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகு - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
முட்டை - 2
பச்சைமிளகாய் - 1
மஞ்சள்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு தண்ணீர், எண்ணெய் விட்டு நன்கு மாவை பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* மாவை பூரிக்கட்டையால் சப்பாத்தி போல் அகலமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தேய்த்து வைத்த மாவை இட்டு அதன் மேலாக முட்டை கலவையை மாவு முழுவதும் படும்படி பரப்பி ஊற்றி சுற்றி வெண்ணெய் தடவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

* சூப்பரான முட்டை பரோட்டா ரெடி!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top