0



சத்து நிறைந்த கம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கெள்வது நல்லது. இன்று கம்பை வைத்து சுவையான சத்தான சட்னி செய்வது எப்படி என்று
பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கம்பு - 100 கிராம்,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
வெங்காயம் - 2,
காய்ந்த மிளகாய் - 8,
உப்பு - தேவையான அளவு,
இஞ்சி, பூண்டு - 50 கிராம்,
புளி - சிறிது.

தாளிக்க...

காய்ந்தமிளகாய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு வதக்கிய பின்னர், வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கவும்.

* வதக்கியவை ஆறியதும் புளி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.

* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் கலந்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

* சத்தான கம்பு கார சட்னி ரெடி. 
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top