0
கடந்த 10 ஆண்டுகளாக பறக்கும் காரை உருவாக்கிக் கொண்டிருந்த ஸ்லோவாகியாவை சேர்ந்த ஏரோமொபில் நிறுவனம், தற்போது தயாரான வைத்துள்ளது. ஏரோமொபில் என்று
அழைக்கக்கூடிய இந்த வாகனத்தை நூற்றுக்கணக்கான மேம்பாடுகளுடன் வடிவமைத்துள்ளனர். இந்த கார், வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் சிறந்த மார்க்கஸ் மொனாக்கோ சூப்பர் கார் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பறக்கும் கார் சாலை மற்றும் வானில் செல்லக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளதால், தனிப்பட்ட போக்குவரத்துக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதாவது நமக்கு விரும்பமான முறையில் போக்குவரத்து தேர்வு செய்து கொள்ளலாம். கார் மற்றும் விமான தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பறக்கும் காரை வானிலும், சாலையிலும் செலுத்த முடியும், அதனால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம்.

கார் மற்றும் விமானத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் காரின் உள்கட்டமைப்பில் ஒட்டுநர் இருக்கை விமானி அறை போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. காரிலிருந்து பறக்கும் காராக மாறவும், பறக்கும் காரிலிருந்து சாலையில் செல்லும் காராக மாறவும் ஒரு பட்டனை அழுத்தினால் போதுமானது. சாலையில் கார் இருந்தால், பின் சக்கரங்கள் உள்ளே மடக்கப்பட்டு முன் பாகம் கொஞ்சம் தூக்கியவாரே கார் மேல செல்லக்கூடிய திறன் பெற்றுள்ளது. இந்த பறக்கும் காரை ஓட்ட நிச்சயம் வாடிக்கையாளர் விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த வாகனத்தை காராக பயன்படுத்தும்போது, வாகனத்தின் வரம்பு 310 மைல்களாகவும், 5 அடி நீளமும் இருக்கும். மேலும் எடை குறைவான ஸ்டீல் ஃபிரேம்ஒர்க் மற்றும் கார்பன் கோட்டிங் உடன் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பறக்கும் கார், விமானமாக மாறும்போது, 26 அடி அகலம் மற்றும் 19 அடி நீளமும் இருக்கும். இந்த பறக்கும் காரில் இரண்டு பேர் மட்டுமே செல்லமுடியும். 
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top