0
காலையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க சத்து நிறைந்த இந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தியை செய்து கொடுக்கலாம்.


தேவையான பொருட்கள் :

ராகி மாவு - அரை கப்,
ஆப்பிள் - ஒன்று,
வாழைப்பழம் - 1
பால் - அரை கப்,
தயிர் - 3 ஸ்பூன்
தேன் - 2 மேசைக்கரண்டி
ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

செய்முறை :

* ஆப்பிள் விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* பாலை கொதிக்க வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

* ராகி மாவை 2 கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரைத்த ராகி கரைசலை அதில் ஊற்றி கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளற வேண்டும். கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.

* பின்னர் மிக்சியில் பால், தயிர், ராகி கூழ், வாழைப்பழம், ஆப்பிள், தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

* அரைத்த ஸ்மூத்தியை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும்.

* சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தி ரெடி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top