0
தேவையான பொருட்கள் :

கேரட் - 1/4 கிலோ,
சர்க்கரை - 1/4 கிலோ,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
பால் - 1 கப்,
நெய் - 100 கிராம்,

குங்குமப்பூ - சிறிது,
சர்க்கரை இல்லாத கோவா - 1/2 கப்,
உடைத்த முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தும் சேர்த்து - 1 கப்.

செய்முறை :

கேரட்டை துருவிக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவை மிதமான தீயில் வைத்து கேரட், பால் சேர்த்து கைவிடாமல் கிளறி சுண்ட விடவும். அது சுருண்டு வரும்போது சர்க்கரையை சேர்த்து கிளறவும். அதுவும் சுருண்டு வரும்பொழுது, கோவாைவ துருவி அல்லது பொடித்து சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அல்வா பதத்திற்கு வந்ததும் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தாவை நெய்யில் வறுக்கவும்.

அலங்கரிக்க சிறிது தனியாக வைத்து கொண்டு, மீதியை நெய்யுடன் அல்வாவில் சேர்த்து கிளறி சுருண்டு வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: இனிப்பு கோவாவாக இருந்தால் சர்க்கரை அளவை குறைக்கவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top