0
மச்சான் நடிகை நமீதாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. என்றாலும், குஜராத் நடிகையான அவர் தற்போது
சென்னைவாசியாகி விட்டார். அதோடு, அரசியல் களமிறங்கி மக்கள் சேவையாற்றப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவிலும் தன்னை இணைத்துக்கொண்டார். அதனால் அதையடுத்து நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் தன்னையும் பிரச்சார பீரங்கியாக அழைப்பார்கள் என்று எதிர்பார்த்த நமீதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதையடுத்து, தனது உடல்கட்டை ஸ்லிம் பண்ணிக்கொண்டு, மலையாளத்தில் மம்மூட்டி நடித்த புலிமுருகன் படத்தில் நடித்தவர், தமிழில் பொட்டு என்ற படத்தில் ஒரு அகோரி வேடத்தில் நடித்துள்ளார் நமீதா. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற யாகன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது நமீதா பேசும்போது, இந்த படத்தில் ஒரு வித்தியாசம் உள்ளது. அதாவது எல்லா படங்களிலும் ஹீரோக்கள் லோக்கலாக இருப்பார்கள். ஹீரோயினிகள் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் ஹீரோயினி லோக்கலாகவும், ஹீரோ டென்மார்க்கில் இருந்தும் வந்திருக்கிறார். இதுவே இந்த படத்தில் புதுமைதான். மேலும், என்னதான் பிரியாணி ருசியாக இருந்தாலும் அதையே தினமும் உணவாக சாப்பிட முடியாது.

அதேபோல் படங்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் ரசித்துப்பார்ப்பார்கள். அந்த வகையில், ஹீரோவில் வித்தியாசம் காட்டி யது போன்று இந்த படத்தின் கதையிலும் டைரக்டர் வித்தியாசம் காட்டியிருப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top