0
பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.


தேவையான பொருட்கள் :

கேரட் - 2
தக்காளி 2,
கருப்பு உப்பு - கொஞ்சம்,
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
புதினா இலைகள் - 10.

செய்முறை :

* கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட், தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். நன்கு கூழாக அரைத்த பிறகு வேறு பவுலில் ஊற்றி கொள்ளவும்.

* அரைத்த ஜூஸில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தவும்.

* உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் கோடைகாலத்தில் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top