0
வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பெண்கள் தினமும் வாழைப்பூ சேர்த்து கொள்வது நல்லது. இன்று வாழைப்பூவை வைத்து மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - 1 (சிறியது),
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
வேக வைத்த துவரம் பருப்பு - ½ கிண்ணம்,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,

தாளிக்க :

எண்ணெய் - 2 தேக்கரண்டி,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல்- 3.

செய்முறை :

* வாழைப்பூவை சுத்தம் பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

* புளியை கொஞ்சம் தண்ணீரில் ஊற போட்டு கெட்டியான புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.

* பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் போட்டு வேக வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வேக வைத்த வாழைப்பூவை போட்டு வதக்கவும்.

* இப்போது கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வாழைப்பூவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

* பிறகு வேக வைத்த துவரம் பருப்பையும் போட்டு ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

* வாழைப்பூ மசியல் ரெடி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top