0
நரம்புகளை பலப்படுத்தி, சோர்வு மேலிடாமல் தடுத்து, நாள் முழுவதும் துள்ளலுடன் ஓடி ஆட வைக்கும் இந்த வெள்ளரி.


தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 2
தக்காளி – 1 சிறியது
வறுத்த வேர்க்கடலை – 1 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய் – 1 மேஜைக்கரண்டி
ப.மிளகாய் – 2
உப்பு – ருசிக்கேற்ப

தாளிக்க :

எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயம்

செய்முறை :

* வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.

* வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.

* மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.

பயன்

கோடையிலே ஏறக்குறைய அனைவருக்கும் ஏற்படும் நீர்க்கடுப்புக்கு நல்ல தீர்வு. பொதுவாக கோடை நாட்களிலே எண்ணெய்ப் பண்டங்களை சாப்பிடுவது அஜீரணத்துக்கு வழி வகுக்கும். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நரம்புகளை பலப்படுத்தி, சோர்வு மேலிடாமல் தடுத்து, நாள் முழுவதும் துள்ளலுடன் ஓடி ஆட வைக்கும் இந்த வெள்ளரி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top