0



சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட இந்த மீன் மிளகு மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் மிளகு மசாலாவை செய்வது எப்படி என்று
பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துண்டு மீன் - அரை கிலோ
வெங்காயம் - 2௦௦ கிராம்
பச்சை மிளகாய் - நான்கு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் - நான்கு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஐந்து
கொத்தமல்லி இலை - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவைகேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் ரூ.1க்கு விற்பனை

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

* அனைத்தும் ஒரளவு வதங்கியதும் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.

* மீன் வெந்ததும், மிளகு துளை சேர்த்து கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும்.

* மீன் மிளகு மசாலா ரெடி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top