0
காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

சப்பாத்தி - 4,
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப.மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க :

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின், ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்..

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் 5 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா ரெடி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top