0
குழந்தைகள் இட்லி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இந்த வகையில் இட்லி வைத்து டிக்கா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மினி இட்லி - பத்து
வெங்காயம் - ஒன்று
தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
இடித்த பூண்டு - இரண்டு பல்
எண்ணெய் - தேவையான அளவு
குடமிளகாய் - ஒன்று
கபாப் ஸ்டிக் - இரண்டு.

செய்முறை :

* வெங்காயம், குடமிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடமிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடமிளகாய் ஒன்று ஆகியவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்து குத்தி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான இட்லி டிக்கா ரெடி.

* மினி இட்லிக்கு பதிலாக இட்லியை துண்டுகளாகவும் வெட்டி கொள்ளலாம்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top