0
கங்காரு, வந்தாமல, கதிரவனின் கோடைமழை ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. அதையடுத்து சாரல், ரீங்காரம் படங்களில்
நடித்துள்ள ஸ்ரீபிரியங்கா, மிக மிக அவசரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆக்சன் ரோலில் நடிக்கும் ஸ்ரீபிரியங்கா, இந்த படத்தைத் தொடர்ந்து வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கெட்ச் படத்திலும் நடிக்கிறார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், சாய் பல்லவி என சில நடி கைகள் பேசப்பட்டு இறுதியாக தமன்னா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதை யடுத்து இந்த படத்திற்காக இன்னொரு நாயகி தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்ரீபிரியங்கா கமிட்டாகியிருக்கிறார். கதைப்படி இந்த படத்தில் ஸ்ரீபிரியங்காவுக்கு இரண்டாவது நாயகி வேடமாம். விக்ரமுடன் படம் முழுக்க வரும் வேடம் என்பதோடு, பர்பாமென்ஸ் பண்ணுவதற்கான ஸ்கோப் அவரது கதாபாத்திரத்தில் உள்ளதாம். அதனால்தான், இரண்டாவது நாயகி வேடம் என்று தயங்காமல் இந்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம் ஸ்ரீபிரியங்கா.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top