0
கோடைகாலத்தில் மாம்பழம் அதிக அளவில் கிடைக்கும். எனவே அத்தகைய மாம்பழத்தை வைத்து ஜூஸ் போட்டு குடித்தால், வெப்பத்திற்கு
நன்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 2
பால் - 1 கப்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

செய்முறை:

* மாம்பழத்தின் தோலை சீவி, சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* நறுக்கிய மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஐஸ்கட்டிகள், பால் மற்றும் தேன் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டியை போட்டு பரிமாற வேண்டும்.

* இப்போது சுவையான மாம்பழ ஜுஸ் ரெடி!!!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top