0
விஜயசாந்தி பாணியில் டாப்ஸி ஆக்ஷனில் கலக்கும் இந்திப் படம் நாம் ஷபானா. இதில் அவர் சர்வதேச குற்றவாளி பிருத்விராஜை
வேட்டையாடும் அரசு ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஹாலிவுட் படமான சால்ட் பாணியில் உருவாகியுள்ள படம் அதில் ஏஞ்சலினா ஜூலி நடித்துள்ள உளவாளி போன்று இதில் டாப்ஸி நடித்துள்ளார்.

இதில் டாப்ஸியுடன் அக்ஷய் குமார், பிருத்விராஜ், மனோஜ் பாஜ்பாய், அனுபம் கேர் நடித்துள்ளனர். நீரஜ் பாண்டே தயாரிக்க, ஷிவம் நாயர் இயக்கி உள்ளார். இந்தப் படம் தமிழில் நான் ஷபானா என்ற பெயரில் வருகிற 31ந் தேதி வெளிவருகிறது. இதன் தமிழ் வசனத்தை எஸ்.பி.சக்ரபாணி எழுதியுள்ளார். படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்திருந்த டாப்ஸி படத்தில் நடித்திருப்பது பற்றி கூறியதாவது:

என் கேரியரில் ஷபானா முக்கியமான படம். ஒரு பக்கா ஆக்ஷன் கேரக்டருக்கு என்னை துணிச்சலுடன் தேர்வு செய்த தயாரிப்பாளருக்கும், இயக்குருக்கும் பெரிய நன்றி. படத்தின் கதையை கேட்டதும் முதலில் என்னால் நடிக்க முடியுமா என்ற தயக்கம் இருந்து. அதனால் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டேன். ஹார்மாகா, ஜப்பான் ஜூடோ, உள்ளிட்ட கலைகளையும் கற்றுக் கொண்டேன். அதன் பிறகே நடித்தேன்.

படத்தில் நான்கு சண்டை காட்சிகள் இருக்கிறது. ஒவ்வொரு சண்டை காட்சியும் 12 மணிநேரம் படமாக்கப்பட்டு பின்னர் அது 10 நிமிடமாக குறைக்கப்பட்டது. எந்த காட்சியிலும் டூப் போடவில்லை. வெறித்தனத்துடன் உயிரை பணயம் வைத்து நடித்தேன். படம் பார்க்கும்போது நான் சொல்வதை உணர முடியும். ஷபானாவை பார்க்கும் பெண்களுக்கு எதையும் சாதிக்கிற துணிச்சல் வரும். ஷபானா போன்று தற்காப்பு கலை கற்றுக் கொள்ளும் ஆர்வம் வரும். இனி வரும் காலங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தற்காப்பு கலை அவசியம் என்பதையும் உணர்வார்கள். தமிழ் படத்தில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். என்றார் டாப்ஸி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top