0



அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று
பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காளான் - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1 கப்
கிராம்பு - 2
பூண்டு - 2
எண்ணெய் - தேவைக்கு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை தண்டி வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு வேகும் அளவு சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

* 10 நிமிடம் ஆன பின்பு அத்துடன் காளானை போட்டு கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* காளான் மற்றும் உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் உப்பு, கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

* சுவையான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி!!!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top