0
டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி கோதுமையில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா செய்வது எப்படி என்று
பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 15
கேரட், பட்டாணி, பீன்ஸ் - மூன்றும் சேர்த்து 150 கிராம்,
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2,
கடலைப் பருப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு, எண்ணெய், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப.
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

* பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கிளறி வைக்கவும்.

* காய்கறிகள், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.

* காய்கறிகள் வெந்தவுடன் அதில் பிரெட் துண்டுகளைப் போட்டு நன்றாக கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

* வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

* சூப்பரான கோதுமை பிரெட் வெஜிடபுள் உப்புமா ரெடி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top