0
தேவையானவை:

சுண்டக் காய்ச்சிய பால் - 1 லிட்டர்,
பாதாம் பருப்பு - 1/2 கப்,
குங்குமப்பூ - சிறிது,

சர்க்கரை - தேவைக்கு,
சாரைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பாதாம் எஸன்ஸ் - 2 துளி.

செய்முறை:

பாதாம் பருப்பை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து தோலை நீக்கி, கொர கொரப்பாக அரைத்து, பாலுடன் நன்கு காய்ச்சவும். தேவையான சர்க்கரை, எஸன்ஸ், குங்குமப்பூ சேர்த்து காய்ச்சவும். கீர் பதத்திற்கு வந்ததும் இறக்கி, சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாரைப்பருப்பு தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: பாதாம்பருப்பை நைசாக அரைத்தும் செய்யலாம். விரும்பினால் ஒரு சிட்டிகை கேசரி பவுடர் பாலில் கலந்து சேர்க்கலாம். இரண்டாவது முறை: (கல்யாண வீடுகளில் அதிக அளவு பாதாம் கீர் செய்ய...)

பால் - 1½ லிட்டர், பாதாம் பருப்பு - 100 கிராம், குங்குமப்பூ - ¼ டீஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், சாரைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், பாதாம் எஸன்ஸ் - 2 துளி, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை. மேலே கொடுத்துள்ள முறையில் செய்யவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top