0
தேவையான பொருட்கள் :

இட்லி - 6,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 2,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள்- 1 டீஸ்பூன்,

கரம் மசாலா - 1 டீஸ்பூன்.
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சைப் பட்டாணி - 1/4 கப்.
குடை மிளகாய் (சிறியது) - 1,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
பச்சை மிளகாய் - 1,
எலுமிச்சை - 1/2 மூடி,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :

ஆறிய இட்லியை சிறிய துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிய பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதங்கியதும் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறி 5 முதல் 6 நிமிடங்களுக்கு பின் இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவி, வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top