0
தேவையான பொருட்கள் :

மைதா - 1 கிலோ
கடலை எண்ணெய் - 500 மி.லி
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

முதலில் மைதாவில் தேவையான உப்பு போட்டு, எண்ணெய், தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். குறைந்தது ஒரு மணிநேரம், அதிகம் 3 மணிநேரம் ஊறவிட வேண்டும். பின் சிறு உருண்டைகளாக உருட்டி, அதன் மீது எண்ணெய் ஊற்றி ஊற விட வேண்டும். பின்னர் வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து உருண்டைகளை மூடிவைக்கவும். பின்னர் உருண்டைகளை எண்ணெயில் நனைத்து விசிறி போல வீசி, அதை கயிறு போல் திரித்து வட்டமாக செய்து கொள்ள வேண்டும். அதையும் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும். தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் வட்டமாக உருண்டைகளை தட்டி எண்ணெய் போட்டு இருபக்கமும் பொன்நிறமாக வரும் வரை பொரித்து எடுத்தால் எண்ணெய் புரோட்டா ரெடி. 
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top