0
தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்
வெங்காயம் - 1,
உருளைக்கிழங்கு - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி

கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1/2 அங்குல துண்டு
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு

அரைக்க :

புதினா - 1 கொத்து
தேங்காய் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 1

செய்முறை :

அரிசியை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வைக்கவும். ஜாரில் புதினா, தேங்காய், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து மசித்து வைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் நெய் விட்டு ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அரைத்து வைத்த புதினா விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து நன்றாக கலந்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். இப்போது 1.5 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். சுவையான புதினா புலாவ் தயார்!!!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top