0
குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இந்த கோதுமை வெஜ் கொழுக்கட்டை. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு  - ஒரு கப்
அரிசிமாவு - ஒரு மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பீன்ஸ் - 10
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
கோஸ் துருவல் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
ஆயில் - 2 தேக்கரண்டி

செய்முறை :

* பீன்ஸ், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட், உருளைக்கிழங்கை துருவிக்கொள்ளவும்.* வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* வறுத்த கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும். அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பீன்ஸ், கேரட், கோஸ், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகாய்த்தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம். லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.

* பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும். மீதமுள்ள மாவிலும் இதே போல் தயார் செய்து கொள்ளவும்.

* இவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* மாலை நேர டிபனுக்கு சுவையான கோதுமை வெஜ் கொழுக்கட்டை தயார்.

* இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top