0
டேட்டா வேகம் குறைந்தாலும், வீடியோ பஃப்பர் ஆகாமல் சீராக இயங்கும் யூடியூப் கோ பீட்டா செயலி இந்தியாவில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் தெரியாத தகவல்களை தேடி தெரிந்து கொள்வதை போன்று, வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழி செய்யும் சேவை தான் யூடியூப். இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின் வீடியோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் கூகுளின் ஆல்ஃபபெட் இன்க் நிறுவனம் யூடியூப் கோ பீட்டா செயலியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த செயலி குறைந்த அளவு இண்டர்நெட் பயன்படுத்தி வீடியோக்களை ஸ்டிரீம் செய்யும் திறன் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதன் வரவேற்பை வைத்தே மற்ற நாடுகளிலும் யூடியூப் கோ வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. யூடியூப் கோ பீட்டா பதிப்பு செயலி மொத்தம் 6.51 எம்.பி அளவு கொண்டுள்ளது. டவுன்லோடு முடிந்து இன்ஸ்டால் செய்யப்பட்டதும், செயலியை எந்த மொழியில் இயக்க வேண்டும் என்ற திரை முதலில் தெரிகிறது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது. பின் யூடியூப் கோ பீட்டா செயலியில் உங்களது தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை கொண்டு வெரிஃபை செய்த பின் வீடியோவிற்கான பக்கம் திறக்கிறது.

எளிய இன்டர்ஃபேஸ் வடிவமைப்பில் தேடுவதற்கான ஆப்ஷன் (சர்ச் பாக்ஸ்), முகப்பு மற்றும் சேமித்தவை என குறைந்தளவு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. முகப்பு ஆப்ஷனில் வீடியோக்களை இண்டர்நெட் இணைப்பில் பார்க்கும் வசதியும், பின்னர் பார்க்க அவற்றை சேமித்து வைக்கும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்க்க வேண்டிய வீடியோவை க்ளிக் செய்ததும் உங்களது மெமரி கார்டில் காலியாக உள்ள மெமரி, மற்றும் எந்த தரத்தில் வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும் அல்லது சேமிக்க வேண்டும் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித தரத்திலும் வீடியோக்களை சேமித்துக் கொள்ளலாம்.

பின் அவற்றை இண்டர்நெட் இல்லாமல் பார்த்து ரசிக்க முடியும். இதனால் மொபைல் டேட்டா இல்லாமல் வை-பை இணைப்பில் வீடியோக்களை சேமித்து கொண்டு அவற்றை இண்டர்நெட் இல்லாத நேரங்களில் பஃப்பர் ஆகாமல் பார்த்து ரசிக்கலாம். குறைந்த தரத்தில் பார்க்கும் ஆப்ஷனை கிளிக் செய்தால் வீடியோ துவக்கத்தில் சில விநாடிகள் லோட் ஆகிறது. பின் பஃப்பர் ஆகாமல் வீடியோ சீராக இயங்குகிறது. அதிக திறன் கொண்ட வீடியோவை பார்க்கும் போது வீடியோவின் மெமரி அளவு அதிகமாக இருந்தாலும், வீடியோ பஃப்பர் ஆகாமல் இயங்குகிறது. எப்படி இயக்கினாலும் யூடியூப் கோ பீட்டா பதிப்பில் வீடியோக்கள் பஃப்பர் ஆகாமல் சீராகவே இயங்குகிறது.

மேலும் நம் இண்டர்நெட்டில் எத்தனை எவ்வளவு மெமரியை ஒவ்வொரு வீடியோவும் எடுத்து கொள்கிறது என்பதை நாமே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்பதும் இந்த செயலியின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. வீடியோக்களை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்பாட் மூலம் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதால் இண்டர்நெட் பயன்பாடும் இருக்காது. வீடியோக்களை மறுபக்கம் பெறுபவர் 15 கே.பி அளவுள்ள இண்டர்நெட் செக்யூரிட்டி செக் செய்த பின் வீடியோக்களை பஃப்பர் ஆகாமல் பார்க்க முடியும். இதே முறை அனைத்து வீடியோக்களுக்கும் பொருந்தும். முதற்கட்டமாக பீட்டா பதிப்பு மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து சோதனைகளும் நிறைவுற்ற பின் முழுமையான பதிப்பில் மேலும் சில வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top