0
சுமார் 80 படங்களுக்கு மேல் நடித்தவர் தேவயானி. காதல் கோட்டை, சூர்யவம்சம், பாரதி ஆகிய படங்களுக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது
பெற்ற தேவயானி, குடும்பப்பாங்கான நாயகியாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். சின்னத்திரையிலும் சில சீரியல்களில் லீடு ரோலில் நடித்த அவர், தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதுபற்றி தேவயானி கூறுகையில், திருமதி தமிழ் படத்திற்கு பிறகு எதிர்பார்த்த படி சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. அதேபோல் நான் நடித்து வந்த முத்தாரம் சீரியலும் நிறைவடைந்து விட்டது. அந்த சமயத்தில்தான் ஒரு பள்ளியில் லீவ் பிளேசில் டீச்சராக சென்றேன். ஆனால் அதை வைத்து நான் முழுநேர டீச்ச ராகி விட்டதாக செய்திகள் வெளியாகி விட்டன. அதையடுத்து படவாய்ப்புகள் வரவில்லை. பின்னர் நான் பள்ளியில் முழுநேர டீச்சராகவில்லை என்று பேட்டி களில் தெரிவித்த பிறகுதான் சில படவாய்ப்புகள் வந்தன.

தமிழில், சகாப்தம், ஸ்ட்ராபெர்ரி படங்களில் நடித்தேன். பின்னர் தெலுங்கில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்தேன். தற்போது மை ஸ்கூல் -என்றொரு மலையாள படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன். இந்த படத்தில் நான் பள்ளி தலைமை ஆசிரியையாக நடிக்கிறேன். எனது பள்ளியில் பயிலும் ஒரு மாணவனை தெரு நாய் ஒன்று கடித்து விடும். அதையடுத்து அந்த மாண வனை காப்பாற்றுவதற்காக போராடுவேன். ரொம்ப உணர்வுப்பூர்வமான வேடம். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறேன். இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் இளம் ஹீரோ ஒருவர் நடிக்கும் படத்தில் அவருக்கு அக்கா வேடத்தில் நடிக் கிறேன். அதுவும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

மேலும், என்னைப்பொறுத்தவரை தேடிவரும் எல்லா படங்களிலுமே நடிக்க வேண்டும் என்கிற ஆசை இல்லை. குறைவான படங்கள் என்றாலும் நல்ல படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். எந்தவொரு வேடமும் என் மனசுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்கிறார் தேவயானி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top