0
வாகை சூடவா இனியாவுக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த இடம் கிடைக்காததால், தெலுங்கு படங்களில் நடிக்க ஐதராபாத்தில் முகாமிட்டு
முயற்சி எடுத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்காததால் மறுபடியும் தமிழுக்கு வந்தவர், கேரக்டர் நடிகையாக உருவெடுத்தார். அப்படி பல படங்களில் நடித்த இனியா, தற்போது பொட்டு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது.

இதுபற்றி இனியா கூறுகையில், பொட்டு என்னை வித்தியாசமான நடிகையாக வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பே நான் சில ஹாரர் படங்களில் நடித்தபோதும் இந்த படம் ரொம்ப புதுமையானது. அதோடு, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இப்படம் வெளியாகிறது. நான், மலையாளம், தமிழ்ப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோதே இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒருகட்டத்தில் அதெல்லாம் நடக்குமா? என்றுகூட நினைத்தேன். ஆனால் இப்போது நானே எதிர்பார்க்காத வகையில், இந்த பொட்டு படம் இந்தியிலும் வெளியாகிறது. ஆக, எனது சினிமா கனவை இந்த படம் நனவாக்கியுள்ளது. அதனால் இதன்பிறகு இந்தியில் நடிப்பதற்கான வாய்ப்புகளுக்காகவும் முயற்சி எடுப்பேன் என்கிறார் இனியா.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top